Part – 1 | வாஸ்து திசை காட்டி , திசை காட்டி என்றால் என்ன ? , எப்படி பயன்படுத்துவது ? / Vastu Shastra For Home / Vastu tips
![]() |
திசைகாட்டி |
அறிமுகம்
வாஸ்து பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் !
வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று . வாஸ்து பார்த்து வீடு கட்டும் பொழுது அந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கும் பொழுது , நல்ல பால் பாக்கியம் , செல்வ செழிப்பு , தொழில் விருத்தி, குடும்ப ஒற்றுமை, பிள்ளைகள் வழி அனுகூலம் , மென்மேலும் வண்டி வாகன யோகம் ஏற்படுவது , எதிர்பார்த்த எல்லா நன்மைகளும் சிறப்பாக நடந்தேறுவது , இது மட்டுமல்ல , இதுபோன்ற மேலும் பல விஷயங்கள், நல்ல விஷயங்கள் நடப்பதற்கு வாஸ்துவும் ஒரு காரணம் !
இந்த வாஸ்து சாஸ்திரம் பற்றி படிப்படியாக ஒவ்வொரு விஷயமாக A to Z வரை தொடர்ந்து இந்த ‘ https://www.snganapathiastro.com ‘ blogger இல் எழுத இருக்கிறேன் !
நீங்கள் புதிதாக இடம் வாங்கும் பொழுது திசைகளை அறிந்து வாங்க வேண்டும் . இந்த திசைகளை நீங்களே எப்படி சுலபமாக அறிந்து கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறேன் முழுமையாக படியுங்கள் !
திசைகள் என்றால் என்ன ?
இந்த திசைகாட்டி என்றால் என்ன ?
இந்த திசை காட்டி எப்படி பயன்படுத்துவது ?
இதற்கான பதில் : இந்த திசை காட்டி என்பது, ஒரு இடத்தை மையமாகக் கொண்டு அந்த இடத்தின் நான்கு திசைகளை அறிவது, அதாவது கிழக்கு, மேற்கு ,வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளை சரியான முறையில் அறிவது . ஒரு இடத்தையோ அல்லது வீடாகவோ வாங்குவதற்கு முன்னர் , கண்டிப்பாக அந்த இடத்தின் நான்கு திசைகளும் சரியான முறையில் அதாவது சூரிய உதய அடிப்படையில் சரியான முறையில் இந்த நான்கு திசைகளும் அமையப்பெற்ற மனைகளை வாங்க வேண்டும் . சூரியன் உதிப்பது கிழக்கு திசை என்று புரிந்து கொள்ள வேண்டும் ! அந்த திசைக்கு ஒத்தவாறு மனையின் நான்கு திசைகளும் அமைய பெற வேண்டும் ! இந்த நான்கு திசைகளும் சரியான முறையில் அமையப்பெற்ற மனைகளே அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு யோகங்களை கொடுக்கும் !
திசை காட்டி என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
திசைகாட்டி என்பது ஒரு கருவி . இந்த திசை காட்டி கருவியில் டிகிரி அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் . அதில் என்ன டிகிரி என்று காண்பிப்பதற்கு சிகப்பு நிறத்தில் அம்புக்குறி போல் ஒரு குறிகாட்டி இருக்கும் ! ( மேலே உள்ள படத்தை பாருங்கள் )
இந்த கூறி காட்டி வடக்கு நோக்கியே காண்பிக்கும் ! அந்த குறிகாட்டி முல்லை வைத்து நான்கு திசைகளும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசைக்கு ஏற்ப சரியான முறையில் அமைந்திருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்க முடியும் !
முக்கிய திசைகள் எட்டு திசைகளாகும் !
இந்த திசைகளை நீங்களே எப்படி தெரிந்து கொள்வது ? இதோ விளக்கம் !
வடக்கு , கிழக்கு, தெற்கு, மேற்கு .. ஆகிய திசைகள் நான்கு முக்கிய திசைகள் ஆகும் , இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் . அடுத்ததாக உப திசைகள் என்று நான்கு திசைகள் உண்டு . அதாவது வடகிழக்கு , தென்கிழக்கு , தென்மேற்கு , வட மேற்கு இந்த நான்கு திசைகளும் உப திசைகள் ஆகம் . ஆக மொத்தம் எட்டு திசைகள் ஆகும் ! மேலும் இந்த எட்டு திசைகளின் நடுப்பகுதியை பிரம்மஸ்தானம் என்று சொல்வார்கள் அதனை ஆகாயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் !
இப்போது திசைகளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால்.. அதற்கு என்ன வழி ? இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பல பேருக்கு அவர்களுடைய வீடு எந்த திசையில் இருக்கிறது என்றே சொல்லத் தெரியாது ! ஒரு சிலருக்கு மட்டுமே தெரிகிறது !
என்னுடைய புதிய வாடிக்கையாளரிடம் நான் பேசும்போது அவர்கள் சொல்லுவார்கள் , அவர்களுடைய வீடு ‘ கிழக்கில் உள்ளதா வடக்கு பார்த்து நோக்கி இருக்கிறதா தெரியவில்லை சார் ‘ என்று என்னிடம் கூறுவார்கள் !
திசையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு கருவி ( Compass ) உள்ளது . அதாவது திசைகாட்டி என்கிற ஒரு கருவி . இந்தக் கருவி ( Compass ) என்பது தனியாக கடைகளிலும் கிடைக்கிறது , அப்படி இல்லை என்றால் உங்கள் மொபைல் ஃபோனிலேயே இந்தக் கருவியை ப்ளே ஸ்டோரில் ( play store ) சென்று டவுன்லோட் ( down load ) செய்து கொள்ளலாம் ! காம்பஸ் ( Compass ) என்று டைப் ( type ) செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
உங்க வீடு எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம் ! அந்த காம்பஸில் நிறைய பாகை ( degree ) அளவுகள் கொடுத்திருப்பார்கள் , அந்த காம்பஸில் உள்ள சிகப்பு குறியை கொண்டு திசைகளை எளிமையாக நீங்கள் அறிந்து கொள்ளலாம் . ( அந்த சிகப்பு அம்புக்குறி எப்பொழுதும் வடக்கு நோக்கி தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ) அம்புக்குறி வடக்கு நோக்கி இருக்கும் பொழுது அதற்கு நேர் எதிர் தெற்கு என்று புரிந்து கொள்ள வேண்டும் . இவ்வாறு உங்கள் வீட்டின் திசையை எளிதாக அறிந்து கொள்ளலாம் !
ஒரு வீடாகவோ அல்லது காலி மனைவயாகவோ நீங்கள் வாங்கும் பொழுது இவ்வாறு தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் ! முக்கியமாக சூரியன் உதிக்கும் திசையை கிழக்கு என்று எடுத்துக்கொண்டு அதற்கு நேர் எதிர் மேற்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ! சூரியன் உதிக்கும் திசையே சரியான கிழக்கு திசை என்று புரிந்து கொள்ளுங்கள் . சூரியன் மறையும் திசையே சரியான மேற்கு திசை என்று புரிந்து கொள்ளுங்கள் ! இதனைக் கொண்டு திசை காட்டியை கொண்டு சரியான நான்கு திசைகளை அறிந்து வீடு மனைகளை வாங்க வேண்டும் ! ( மேலும் உங்களுக்கு தெளிவாக விளக்கம் வேண்டும் என்றால் என்னுடைய இந்த whatsup நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது தொலைபேசி வழி அழையுங்கள் Phone And What’s up Number : 97 42 88 64 88, Another phone Number : 95 85 88 80 87 )
திசைகளை தெளிவாக அறிந்து கொள்ள இவ்வாறு செய்யுங்கள் !
இப்போது நீங்கள் சிகப்பு அம்புக்குறி காட்டும் வடக்கு திசையை நோக்கி நில்லுங்கள் , அதாவது வடக்கு திசையை நோக்கி நில்லுங்கள் , இப்பொழுது உங்கள் வலது கை இருக்கும் திசை கிழக்கு திசையாகும் . அடுத்து உங்கள் இடது கை இருக்கும் திசை மேற்கு திசையாகும் . உங்கள் முதுகு பக்கம் உள்ள திசை தெற்கு திசையாகும் . இப்போது உங்களுக்கு தெளிவாக இந்த நான்கு திசைகளும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் ! இவ்வாறு தான் நிலம் வாங்கும் போது இந்த நான்கு திசைகளும் சரியான திசையில் இருக்கிறதா என்று அறிந்து அந்த மனையை நீங்கள் வாங்க வேண்டும் !
சரியான திசையில் அமையப் பெறாத வீட்டு மனையை வாங்க வேண்டாம் !
இந்த வீட்டு மனைகளை விற்பனை செய்பவர்கள் , ஒரு சிலர் சரியான முறையில் இந்த திசைகளை அமைத்து மனைகளை பிரிப்பது இல்லை . அவ்வாறு அமைந்துள்ள மனைகளை வாங்க வேண்டாம் .. என அறிவுறுத்துகிறேன் . ஒரு சிலர் வீட்டு மனைகளை இந்த திசைகளின் அடிப்படையில் சரியாக அமைத்து வீட்டு மனைகளை விற்பனை செய்கிறார்கள் .
இதனை நீங்களே திசை காட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று கண்டுபிடித்து வீடு மனைகளை வாங்குங்கள் ! உங்கள் செல்போனில் இந்த திசைகாட்டியை ( Compass ) பதிவிறக்கம் ( download ) செய்து கொண்டு நீங்களே சரியான திசைகளை அறிந்து வீடு மனைகளை வாங்குங்கள் !
நீங்கள் சரியான திசையில் அமையப்பெற்றுள்ள வீடு மனைகளை வாங்கி அதில் வீடு கட்டி நல்ல நாளில் குடி புகுந்து வாழும் பொழுது சகல சௌபாக்கியங்களும் நீங்கள் அடைவது உறுதி !
ஒரு வீடு சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும் , அதே சமயம் வாஸ்து முறைப்படி சரியான முறையில் அந்த வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும் !
அடுத்த பதிவில் நீங்கள் ஒரு நிலம் வாங்கும் பொழுது எப்படிப்பட்ட நிலத்தை வாங்க வேண்டும் ? நிலம் வாங்கும் போது என்ன பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி தெளிவாக எழுதி இருக்கிறேன் !
இந்த https://www.snganapathiastro.com blog ஐ பாலோ செய்யுங்கள் !
மேலும் உங்கள் புதிய வீட்டிற்கான வாஸ்து வரைபடம் உங்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் ! அதாவது வீட்டு அறை அளவுகள், வீட்டுமனையின் நீல அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், சுற்று சுவர் அளவு எப்படி அமைக்க வேண்டும் , சமையலறை எங்கு வரவேண்டும், படுக்கையறை எங்கு வரவேண்டும், toilet bathroom எங்கு வரவேண்டும் , வாஸ்து முறைப்படி வீடு வாசல் அளவு எப்படி அமைய வேண்டும், எந்த நாளில் பூமி பூஜை போட வேண்டும், எந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் , என்பது பற்றி அறிய என்னை இந்த வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் !
உங்கள் வீட்டுக்கான பிளான் வாஸ்துபடி அமைத்துக் கொடுக்கப்படும் !
வாஸ்து மற்றும் ஜாதகம் தொடர்பான அனைத்து விஷயங்களும் தொலைபேசி வழியே உங்களுக்கு பார்த்து கொடுக்கப்படும் ! தேவை ஏற்பட்டால் நேரடியாகவும் வந்து வாஸ்து படி உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் !
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் , S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
மேலும் இந்தப் பதிவையும் பாருங்கள் : தொழில் வளர்ச்சிக்கு வாஸ்து | vastu tips for business growth